சென்னை,

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும், ஊக்கத்தொகை 5,300-ல் இருந்து 12,000 ஆக உயர்த்தப்பட வேண்டும், 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விடுப்பு தொகையினை வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 17 ஆம் தேதி இரவு முதல் 18 ஆம் தேதி இரவு வரை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கடந்த 7 ஆம் தேதி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில்  அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அவசர மருத்துவ உதவி பெரிதும் பாதிக்கப்படும் என வேலை நிறுத்ததிற்கு எதிராக
சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல  மனுவை வழக்கறிஞர் பேட்ரிக் என்பவர்  தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அத்தியாவசிய சேவைகளின் கீழ் ஆம்புலன்ஸ் வருவதால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கூடாது என கூறி வேலை நிறுத்தத்திற்கு தடைவிதித்தது.

Leave A Reply