ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மகளிரை ஒருங்கிணைத்து சுய உதவிக் குழுக்கள் மூலம் அவர்கள் பொருளாதார தன்னிறைவு பெற்று தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கல்வியில் பின் தங்கியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிறப்புடன் கல்வி பயிலவும், நம்பிக்கையோடு தங்களது பத்து, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்ளவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் ஆண்டு தோறும் ஐ.வி.டி.பி நிறுவனம் சிறந்த ஆசிரியர்களைக்கொண்டு “வெற்றி நம்கையில”; எனும் வினாவிடை தொகுப்பு நூலைத் தயாரித்து அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கி வருகிறது.

“வெற்றி நம்கையில்” வினாவிடை தொகுப்பு நூலின் பதினோராம் பதிப்பு வெளியீட்டு விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையேற்று  நூலை வெளியிட்டு ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனத்தின் கல்விப்பணிகளை பாராட்டினார். இவ்விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அ.புகழேந்தி முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் கடந்த கல்வி ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு  தலா ஒரு கிராம்  தங்க பதக்கம் வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: