டோக்கியோ:
ஜப்பானில் தென் மேற்கு பகுதியில் மியாசாகி மாகாணம் உள்ளது.இங்குள்ள ஷின்மோ டேக் என்ற எரிமலை 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று  வெடித்தது.இதனால் அதில் இருந்து எரிமலை குழம்பு வெளியேறியது. அத்துடன் சாம்பலும் வெளியேறி 1700 மீட்டர் உயரத்துக்கு காற்றில் பரவுகிறது. இதனால் எரிமலையை சுற்றியுள்ள 4 நகரங்கள் சாம்பலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மாணவ-மாணவிகள் ஹெல்மட் மற்றும் முகமூடிகளை அணிந்தபடி பள்ளிக்கு சென்றனர்.

Leave A Reply