நியூயார்க்:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடகொரியா மீது புதிய தடையை விதித்துள்ளது. அதன்படி அந்த நாட்டின் பெட்ரெல் 8, ஹாவோ பான் 6, டோங் சான் 2, ஜி சுன் ஆகிய 4 வர்த்தக கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.இதன்மூலம் சீனா உட்பட எந்த நாடும் தங்கள் துறைமுகங்களில் இந்த 4 கப்பல்களையும் நிறுத்த அனுமதிக்க இயலாது. ஐ.நா.வின் விதிமுறை மீறியதற்காக குறிப்பிட்ட ஒரு நாட்டின் கப்பல்களை உலக நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஹூயூஜ் கிரிபித்ஸ் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: