புதுதில்லி;
ரோஹிங்யா அகதிகளை நவம்பர் 21-ம் தேதி வரையில் நாட்டைவிட்டு வெளியேற்ற கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம், ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றும் விவகாரத்தில் விசாரணையை முன்னெடுக்க அனைத்து தரப்பிற்கும் நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது.
“தேசத்தின் முக்கியத்துவம் இரண்டாவதாக இருக்க முடியாது, அதேவேளையில் ரோஹிங்யா அகதிகளின் மனித உரிமைகளையும் மனதில் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் நடுநிலையுடன் இருக்க வேண்டும். இது வழக்கமான வழக்கு கிடையாது, இவ்வழக்கில் பலரது மனித உரிமையும் அடங்கி உள்ளது” என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், இவ்விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவ இருதரப்பும் அனைத்து ஆவணங்கள் மற்றும் சர்வதேச மரபுகளை தொகுத்து வழங்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.மியான்மரில் அரச அடக்குமுறையிலிருந்து தப்பி ரோஹிங்யா இன இஸ்லாமியர்கள் இந்தியா, வங்கதேசம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். இந்தியாவில் ஜம்மு, ஹைதராபாத், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லியில் உள்ள முகாம்களில் ஏற்கெனவே அகதிகளாக தங்கி உள்ளனர்.

இந்நிலையில், மியான்மரில் ரோஹிங்யா மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ள சூழலிலும், ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுவது என்பது கொள்கை முடிவாகும், சுப்ரீம் கோர்ட்டு தலையிடக்கூடாது என்றது.

ரோஹிங்யா அகதிகளுக்கு உலக பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு உள்ளது என்றும் அவர்களை தொடர்ச்சியாக இந்தியாவில் தங்குவதற்கு அனுமதிப்பது என்பது தேசத்திற்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றும் மோடி அரசு இதுதொட்ரபான வழக்கு விசாரணையில் ரோஹிங்யா இஸ்லாமியர்களை நவம்பர் 21-ம் தேதி வரையில் நாட்டைவிட்டு வெளியேற்ற கூடாது என கூறியுள்ளது.

Leave A Reply