பல்லாவரம் நகராட்சி, குரோம்பேட்டை நியுகாலனி மும்மூர்த்தி நகரில் ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இம்மாதம் பொருட்கள் வழங்காமல், வழங்கியதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியினரும், அப்பகுதிமக்களும் ரேசன் கடையை முற்றுகையிட்டனர். இதனையறிந்து அங்கு வந்த உணவுபொருள் வழங்கல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 3 மாதங்களாக நிர்பந்தப்படுத்தி பணத்தை பெற்றுக்கொண்டு சோப்பு வழங்கவில்லை என்று பொதுமக்கள் கூறினர்.

இதனையடுத்து ஊழியரை பணியிட மாற்றம் செய்த அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கவும், ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட பணத்திற்கு சோப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

Leave A Reply