பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாதன் நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதி வெறியை தூண்டி, பிரிவினையை ஏற்படுத்தி வரும் உதவி பேராசிரியர் மாரப்பன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை  புறக்கணித்து  அக். 11 அன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

இந்த கல்லூரியில் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, மீஞ்சூர், சோழவரம், எண்ணுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அனைத்து சமூகத்தை சேர்ந்த சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் உதவி பேராசிரியராக மாரப்பன் என்பவரும் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். இவர் வரலாறு துறை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார். இவர் கடந்த அக். 11 அன்று கல்லூரியில் உள்ள வரலாற்று துறை இரண்டாம் ஆண்டு படிக்கும் வகுப்பறைக்கு சென்றுள்ளார்.அங்கு வகுப்பறையில் இருந்த மாணவர் விவேக் என்பவரை அழைத்து, “ உயர்சாதியை சேர்ந்த,  நீ இனி தலித் மாணவர்களிடம் பேசக் கூடாது’’ என்று கூறியுள்ளார். மாரப்பனின் இந்த பேச்சை  கேட்டதும் விவேக் உட்பட சக மாணவர்கள் கொதித்துப்போனார்கள்.

உதவிப் பேராசிரியர் மாரப்பனின் இந்த சாதி வெறியை தூண்டும் பேச்சுக்கு மாணவர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாதி பேதமின்றி நண்பர்களாக பழகி வரும் மாணவர்களிடையே பிரிவினையை விதைக்கும் பேராசிரியர் மாரப்பன் மீது துறைவாரியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரி  அக். 11 ஆம்தேதி முதல் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே  இந்த பேராசிரியர்  தலித் சமூகத்தை சேர்ந்த பேராசிரியர்களிடம்  உயர்சாதி மாணவர்கள் பாடம் படிக்கக் கூடாது என்று உளறிவந்தார். தாம் சொல்வதை கேட்கவில்லை என்றால் தேர்வின் போது இன்டேனல் மார்க் போட மாட்டேன் என்றும்  மிட்டியிருக்கிறார். தேசிய தலைவர் அம்பேத்கர் டாலரை அணிந்து வந்த மாணவரை மாரப்பன் கேலி செய்துள்ளார்.ஏற்கனவே அம்பேத்கர் படத்தை கல்லூரியில் மாட்டக்கூடாது என்று பிரச்சினை செய்தபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் இதே கல்லூரிக்கு திரும்பியுள்ளார்.
தலித்துக்கள் குலத்தொழில் செய்வது தான் சரி என்றும் அவர்களின் மூளையில் படிப்பு ஏறாது என்றும் இவர் பேசியிருக்கிறார். மாரப்பனுக்கு சில பேராசிரியர்கள்  உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது.

எந்த சாதி பேதமின்றி  சமதர்ம சமுகத்தை உருவாக்க பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மத்தியில், மாரப்பன் போன்ற சிலர் இருப்பதால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.  எனவே உயர்கல்வித்துறை அதிகாரிகள் உடனே தலையிட்டு மாரப்பனை  தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், இல்லையென்றால் மாநிலம் தழுவிய அனைத்து கல்லூரிகளின்  போராட்டமாக இது மாறும். மற்ற சில பேராசிரியர்கள் மத்தியிலும் தலித் விரோத போக்கு உள்ளதால்  முழு  விசாரணை நடத்தி அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் கருப்பனிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கல்லூரி முதல்வர் உதவி பேராசிரியர் மாரப்பனின் 11 ஆண்டு காலம் நடத்திய அட்டகாசத்தை எல்லாம் பொறுத்து கொண்டீர்கள். இன்னும் ஓரிரு நாட்கள் பொறுமையுடன் இருங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கல்லூரி முதல்வர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்காததால் அக்-12 மற்றும் 13-அன்றும் தொடர்ந்து வகுப்புகள்

Leave A Reply

%d bloggers like this: