டோக்கியோ : பிலிப்பைன்ஸ் அருகே கடலில் சரக்கு கப்பல் மூழ்கிய விபத்தில் 11 இந்தியர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; பிலிப்பைன்ஸ் அருகே சரக்கு கப்பல் ஒன்று 26 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக கப்பல் நீரில் மூழ்கியது.  இதில் பயணம் செய்த இந்தியர்களில் 11 பேர் மாயமானதாக கூறப்படுகின்றது. மேலும் 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பின்னர் தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் 2 ரோந்து கப்பல் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜப்பான் , பிலிப்பைன்ஸ், சீன நாட்டு தூதரகங்கள் மூலமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Leave A Reply