திருப்பூர், அக்.13 –
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் தொகை ரூ.7 ஆயிரம் வீதம் வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் பிஎஸ்என்எல் பிரதான தொலைபேசி நிலையம் முன்பாக வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவர் வாலீசன் தலைமை ஏற்றார். மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் முகமது ஜாபர், கிளைச் செயலாளர்கள் குமரவேல், விஸ்வநாதன், என்எப்டிஇ சங்க தலைவர் என்.ரவி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை உதவிச் செயலாளர் இளஞ்செல்வன் நன்றி கூறினார்.

பொள்ளாச்சி:
இதேபோல், போனஸ் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கான செப்டம்பர் மாத ஊதியத்தினை உடனடியாக வழங்கிடக்கோரி வெள்ளியன்று பொள்ளாச்சியிலுள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட உதவி தலைவர் வி.சசிதரன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் பி.தங்கமணி, கிளை செயலாளர் ஆர்.பிரபாகரன், எஸ்என்இஏ செயலாளர் ஆர்.அன்பரசு, ஓ.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், கிளை உதவி செயலாளர் ஏ.
சாகுல்அமீது நன்றி கூறினார்.

Leave A Reply