கடலூர் மாவட்டம்  காட்டுமன்னார்கோவிலில் முதியவர் ஒருவர் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

பாசனத்திற்கு கல்லணை, கீழணை ஆகியவற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி காட்டுமன்னார்கோவில் மாவட்ட குற்றவியல், உரிமையில் நடுவர் நீதிமன்றம் எதிரே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் மரத்தில் 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் பெட்ரோல் பாட்டிலுடன்  ஏறினார்.

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதியவரிடம், தண்ணீர் திறக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால், அந்த முதியவர் கீழே இறங்க மறுத்துவிட்டார்.  பிறகு, விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன் பேசியதை அடுத்து  போராட்டத்தை திரும்ப பெற்றார்.

கல்லணையில் கடந்த 5ம் தேதி கொள்ளிடத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் தண்ணீர் இன்னும் கீழணைக்கு வரவில்லை என்பது குறிப்பிட தக்கது.

Leave A Reply