தமிழகத்தில் முன்னணி பண்பலை வானொலி நிலையங்களில் ஒன்றான  ரேடியோ சிட்டி 91.1 எஃப்.எம். நட்சத்திரங்கள் பங்கேற்கும் ரேடியோ சிட்டி ஸ்டார் எக்ஸ்பிரஸ் என்ற நிகழ்ச்சியை அறிமுகம் செய்துள்ளது.

ஓராண்டுக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் புதிய திரை நட்சத்திரம் ஒருவர் ரேடியோ ஜாக்கியாக ஒவ்வொரு நாளும் அறிமுகப்படுத்தப்படுவார்.நாள்தோறும் காலையில் ரேடியோ ஜாக்கி லயாவுடன் இணைந்து இதுவரையில் தங்களது பயணத்தில் கிட்டிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.  இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே நடிகர் ஜெயம் ரவி , நடிகர் சிபிராஜ் உடன் இணைந்து பங்கேற்றார். புதுமையான நிகழ்ச்சிகள் மூலம் நாங்கள் நேயர்களுடன் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்று ரேடியோ சிட்டி நிர்வாகி கார்த்திக் கல்லா கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: