திருப்பூர்:
ஜிஎஸ்டி வரி விதிப்பினால் காங்கயம், வெள்ளக்கோவில் வட்டாரத்தில் விசைத்தறி மற்றும் சிறுநூல் மில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் இந்த வரிவிதிப்பை நிறுத்தி வைக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கயம் தாலுகா குழுச் செயலாளர் கே.திருவேங்கடசாமி வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் விசைத்தறி, சிறு நூல் உற்பத்தி தொழில்கள் கடும் பாதிப்பைச் சந்தித்கின்றன. எனவே ஜிஎஸ்டி வரி உயர்வை நிறுத்த வேண்டும். இதேபோல், மாநில அரசின் அரசாணை இல்லாமல், மக்கள் பிரதிநிதிகளும் இல்லாத சூழலில் காங்கயம், வெள்ளக்கோவில் நகராட்சிகளில் குடிநீர் வரி, வீட்டுவரி ஆகியவற்றை உயர்த்து வது சரியல்ல. எனவே வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு சார்பில் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply