ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல்இயூ மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஒப்பந்ததொழிலாளர்களுக்கு பிரதிமாதம் 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்கவேண்டும். திருத்தப்பட்ட போனஸ் ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கேற்ப சம்பளம் வழங்கவேண்டும்.அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் இஎஸ்ஐ,பிஎப் நடைமுறைபடுத்த வேண்டும். 8 மணி நேர வேலை, வாரவிடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மாவட்டத் தலைவர் டி.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாநில உதவிச் செயலாளர் எம்.பாபு, மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் என்.ரமேஷ், உதவித் தலைவர் எஸ். அழகிரிசாமி,  ஒப்பந்த ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் பி.ஆர். சுகுமார், மாவட்டச் செயலாளர் எம்.சௌந்தரராஜன், மாவட்டத் தலைவர் பரிதிவேல் ஆகியோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: