தெலுங்கானா,
தெலுங்கானா மாநிலம் கரிம்நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கும்பல் தாக்க முயன்றது. இதையறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்கள் உடனே திரண்டனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர் தாக்குதல் நடத்த வந்த, ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பலை அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். இந்த தாக்குதல் முயற்சி என்பது நின்றுவிடப் போவதில்லை. அதே போல் மதவெறியர்களுக்கெதிரான நம் போராட்டத்தை நாமும் ஒரு போதும் நிறுத்தப்போவதில்லை. நமது போராட்டம் நாட்டின் மதச்சார்பின்மையை காக்கவும், சமூகநீதியை பாதுகாக்கவும் நமது போராட்டம் தொடரும். அதற்காக என்ன விலைகொடுக்கவும், எதையும் எதிர்கொள்ளவும் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதுமே தயாராக இருக்கிறது என மார்கசிஸ்ட் கட்சி தோழர்கள் தடியில் கட்டிய செங்கொடியை ஏந்தி போர் முழக்கமிட்டனர்.

Leave A Reply