பல அடிப்படை தேவைகளுக்கான அரசு அலுவலகங்கள் அமைந்திருந்தும் அதனை பயன்படுத்திடும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தாததால் திருவெண்ணெய் நல்லூர் பேரூராட்சி முன்னேறாமலேயே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகரம் சரித்திர புகழ் வாய்ந்த நகரமாகும். 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரை தடுத்தாட்கொண்டதாக கூறப்படும் ஆன்மீக புகழ் உள்ள அளவிற்கு உழைப்பாளி மக்களான விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல போராட்ட இயக்கங்கள் நடைபெற்ற இடம். நில உச்சவரம்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் சட்டப் போராட்டம் நடத்தி குத்தகை விவசாயிகள் பலருக்கும் நிலம் பெற்றுக்கொடுத்தது விவசாயிகள் சங்கம். இதன்மூலம் இடதுசாரி இயக்கம் வேறூன்றி இப்பகுதி மக்கள் நலனுக்கு பல நன்மைகளை செய்ய தூண்டுகோலானது.

120 ஆண்டு வயதான பத்திரபதிவு அலுவலகம், 53 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கொண்ட ஒன்றிய அலுவலகம், இந்த விவசாய கிராமங்களின் விளைபொருட்களுக்கான ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், சுதந்திரப் போராட்ட காலத்தில் துவக்கப்பட்ட காவல்நிலையம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் ஒருங்கே அமைந்த இடம்.

பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங் கள் மூலம் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, தீயணைப்பு நிலையம், கமிட்டி விரிவாக்கம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் “காயக்கட்டு ஊர்வலம்” நடத்தி ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டது.

இவ்வூர் மலட்டாற்றின் கரையிலிருந்தும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் நிலவிய குடிநீர் பிரச்சனை, சாத்தனூர் அணையிலி ருந்து விவசாயத்திற்கு பாசன நீர் உள்ளிட்ட தண்ணீர் பிரச்சனையை தீர்க்க பல போராட்டங்கள் நடத்தி பிரச்சனையை போக்கியது, அரசுக் கலைக்கல்லூரி வர முன்முயற்சி எடுத்து வெற்றிபெற்றது என இப்பகுதி மக்கள் நலனுக்கு ஏராளமாக சேவைபுரிந்துள்ளது சிபிஎம்.

ஆலைக்கு தண்ணீர்… ஆளுக்கு இல்லை…
ஆனால் தொடர்ந்துவந்த தமிழக ஆளுங்கட்சிகளின் சுயநல அரசியல் காரணமாக 15 வார்டுகளைக்கொண்ட இப்பேரூராட்சி முன்னேற்றமடைய இயலவில்லை. தற்போதைய நகரின் நிலையோ கொடுமை. 3 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் செங்கல்ராயன் சர்க்கரை ஆலைக்கே கடந்த 40 ஆண்டுகளாக தண்ணீர் வழங்கிவரும் இந்நகரில் தற்போது மேடான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இருநாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. பல தெருக்களிலும், 3 வார்டுகளைக் கொண்ட காந்திக்குப்பம் காலனியிலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க என கூறப்பட்டு ‘கடமைக்கு’ (கமிஷனுக்கு) கட்டப்பட்ட மினி டேங்குகள் தண்ணீர் வராமலும், மோட்டார் பழுதாகியும், மேடை இடிந்தும் கவனிப்பாரற்று கிடக்கின்றன.

ரத்தான ஒப்பந்தம்
“300 ஏக்கர் விவசாய பாசனத்திற்கு பயன்பட்ட முக்கியமான கிழக்குவெளி பாசன கால்வாய் ஆக்ரமிப்புகளால் பயனற்று உள்ளது. இதனை தூர்வாரி முறைப்படுத்த பல மாதங்களுக்கு முன் ரூ 20 லட்சத்திற்குமேல் டெண்டர் விடப்பட்டு ஆக்ரமிப்பாளர்களினால் உள்ளூர்பகைவரும் என்ற காரணத்தால் டெண்டர் எடுத்த உள்ளூர் பிரமுகர் பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டதால் அப்பணி ரத்தானது. இதற்கு பலவருடங்கள் முன்பு ரூ 60 லட்சத்திற்குமேல் இக்கால்வாய் சீரமைக்க ஒதுக்கப்பட்டு அதில் பெரும்பகுதி முக்கிய பிரமுகர்களால் ஸ்வாகா ஆனதாக தெரிகிறது” என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க விழுப்புரம் தெற்கு மாவட்ட மூத்த தலைவர் கே.எம்.ஜெயராமன்.

இம்மாதம் கடலூரிலிருந்து வந்த பேரூராட்சி தொடர்பான பொறியாளர் இக்கால்வாயை ஆய்வு செய்துவிட்டு உதட்டை பிதுக்கிவிட்டு சென்றுவிட்டார். ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சொந்த இடம் இல்லாமல் இட நெருக்கடியில் விவசாயிகளை அவதிக்குள்ளாக்குகிறது. அங்கு குடிநீர்வசதி இல்லை.

பைத்பைத்து 110…
ரூ.35 லட்சம் செலவில் 2004ஆம் ஆண்டு கட்டப்பட்ட பேருந்து நிலையம் தொடர்ந்து பயன்பாடற்று உள்ளது. பல பேருந்துகள் நகருக்கு வெளியேயே திரும்பி சென்று விடுகின்றன. இதனால் நகரின் உட்புறத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பெரும் அவதியடை கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பாதுகாப் பற்ற நிலையில் ஊருக்குள் வரும் நிலையுள்ளது.

பேரூராட்சி வரி வசூலிக்கப்பட்டாலும் போக்குவரத்து, மற்றும் காவல்துறையினரின் கண்டுகொள்ளாத தன்மையால் இந்நிலை நீடிக்கிறது. இங்குள்ள கட்டண கழிப்பறை ஆண்டுக்கு ரூ.25 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டு தினசரி இதன் வசூல் ரூ.150 அளவிற்குதான் என்கிறார் கட்டணம் வசூலிப்பவர். நீளமான நிழற்குடை இருந்தும் பராமரிப்பில்லாமல், தரையும் குண்டும், குழியுமாக உள்ளது.

இந்த வளாகத்தில் 2007-ல் ரூ.51 லட்சம் செலவில் கட்டப்பட்ட சமுதாயக் கூடமும் பயனற்று பராமரிப்பில்லாமல் உள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் திட்டச்செலவை இருமடங்காக போட்டு பாதி தொகை பங்கு பிரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்

ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாமல் ஆக்ரமிக்கப்பட்ட மருத்துவமனை பாதை.

சாட்டுகின்றனர்.

அதிகரிக்கும் கூட்டம்… பற்றாக்குறை பணியாளர்.
சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஷேக்சலாவுதீன் கூறுமம்போது  “ஒரு பேரூராட்சி, 9 ஊராட்சிகள், 5 துணை கிராமங்கள் என 30ஆயிரம் பேருக்குமேல் பயனடைய என செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் சிகிச்சைக்கு வருவோர் காத்துக்கிடக்கும் நிலையுள்ளது. மேலும் ரத்தப் பரிசோதனைக்குக்கூட அவுட் சோர்சிங் எனப்படும் வெளிநபர் சோதனை செய்யும் நிலையுள்ளது”என்றார்.

இங்குள்ள குடிநீர் தொ

 சுத்தப்படுத்த வழியில்லாத மருத்துவமனை குடிநீர் தொட்டி.

ட்டி சுத்தம் செய்ய எந்த வசதியுமின்றி முழுமையாக காங்கிரீட்டால் மூடப்பட்டுள்ளது. பிளீச்சிங் பவுடர் போடவும் வழியில்லாமல் பராமரிப்பின்றி உள்ள இத்தொட்டித் தண்ணீரை பிடித்து குடிப்பவர்களுக்கு தண்ணீரால் உருவாகும் நோய்கள்வர வாய்ப்புள்ளது என்பது வெளிப்படை.

நாம் நேரில் சென்றிருந்த 11 ஆந்தேதி பகல் 11 மணியளவிலேயே டெங்கு நோய்க்கு தரும் நிலவேம்பு கஷாயம் காலியான நிலையில் இருந்தது. பலபேர் வந்து ஏமாந்து திரும்பிச் சென்றனர். தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறையின் இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுவது பெரும்பாலும் விளம்பர அறிவிப்புகளாகவே உள்ளதை அரசு மருத்துவமனைகளில் காணமுடிந்தது. முக்கியமாக ஆம்புலன்ஸ்கூட மருத்துவமனை அருகே செல்ல வாய்ப்பின்றி வழி நெடுகிலும் மரத்துண்டுகளும், இருசக்கர வாகனங்களும் ஆக்ரமித்துள்ளன. காவலர் கிடையாது.

சுத்தப்படுத்த வழியில்லாத மருத்துவமனை குடிநீர் தொட்டி.

குடிநீர், மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து என சொல்லச் சொல்ல மூச்சு வாங்குகிறது திருவெண்ணெய்நல்லூர் நகரின் பிரச்சனைகள். தொடர்ந்து ஏழை, எளிய, அடித்தட்டு மக்கள் பிரச்சனைகளுக்காகவே போராடிவரும் சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களின் பின்னால் அணிதிரளுவதுதான் மேம்பாட்டிற்கான ஒரேவழி. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதை செய்வதுதானே சமூக நலனுக்கு உகந்தது.
– வி.சாமிநாதன்.

Leave A Reply

%d bloggers like this: