தீபாவளி பண்டிகை போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு, வருகிற 15, 16, 17 மற்றும் 23 ஆகிய 4 நாட்களிலும், பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மார்க்கங்களிலிருந்து சென்னை வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
அந்த வாகனங்கள் மாதவரம் ஜிஎன்டி சாலை, மாதவரம், பாடியநல்லூர் டோல்கேட் அருகில், திருவள்ளூர் சாலை, கள்ளிக்குப்பம் டோல்கேட், மதுரவாயல் டோல்கேட், வெளிவட்ட சாலை நசரத் பேட்டை, ஜி.எஸ்.டி. ரோடு, செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், வண்டலூர் பாலம் வழியாக இயக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாகவும், அடையாறில் இருந்து சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை வழியாகவும் பெருங்களத்தூர் வரை செல்லும் வாகனங்களை கான்கார்டு சந்திப்பில் வேளச்சேரி பிரதான சாலை வழியாக பெரும்பாக்கம், அகரம்தென் சாலை, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை வழியாக மாற்றுப் பாதையில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

100 அடி சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் சிப்பெட் கம்பெனி அருகிலிருந்து கிண்டி நோக்கி கத்திப்பாரா மேம்பாலம் வந்து, சின்னமலை, தாலுகா அலுவலக ரோடு, கான்கார்டு சந்திப்பு, வேளச்சேரி மெயின்ரோடு, பெரும்பாக்கம், அகரம்தென் ரோடு, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது. 100 அடி சாலை, பாடியில் இருந்து கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சிடிஎச் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3ஆவது அவென்யூ, 2ஆவது நிழற்சாலை, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் சாலை, மாந்தோப்பு வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் ஈவெரா சாலையில் மதுரவாயல் நோக்கிச் செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13ஆவது பிரதான சாலை, 2ஆவது நிழற்சாலை, எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு, வானகரம் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும். வடபழனி நோக்கி செல்லும் தனியார் வாகனங்கள், என்எஸ்கே நகர் சந்திப்பு, ரசாக்கார்டன், எம்எம்டிஏ காலனி விநாயகபுரம் வழியாகச் செல்ல வேண்டும். பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டால், வண்டலூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், பெருங்களத்தூர் சந்திப்பில் இருந்து காந்தி ரோடு, நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் திருப்பி விடப்படும். பண்டிகைக் காலங்களில் பொதுவாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் உள்ளதால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் வாகன ஓட்டுனர்கள் இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாகச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave A Reply