டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வலியுறுத்தி வெள்ளியன்று (அக்.13) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக சென்று அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எஸ்.நரசிம்மன், “ டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதேநேரத்தில் நகராட்சி நிர்வாகம் நாள்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும், கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும்” என்றார்.

“குப்பைகளுக்கு வரிவிதிப்பதை தவிர்க்க வேண்டும், 40 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதை கைவிட்டு, ஒருநாள் விட்டு ஒரு நாள் விநியோகம் செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

Leave A Reply