பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக நாள்தோறும் சிறுவர் முதல் வயதானவர்கள் வரை உயிரிழந்து வருகிறார்கள். பத்து நாட்களில் டெங்கு காய்ச்சலை தடுப்பதாக கூறிய தமிழக அரசு பத்து மாதங்களாகியும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையும், போதிய மருந்து தட்டுப்பாடும் நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டன. இந்நிலையில்  டெங்கு காய்ச்சலை உடனடியாக கட்டுப்படுத்தக்கோரி காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் வாலிபர் மற்றும் மாதர் சங்கத்தின் சார்பில் சோமங்களம் ஆரம்ப சுகாதார மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தின் பகுதி செயலாளர் எஸ்.கார்த்திக், நிர்வாகிகள் இளங்கோ, மாதர் சங்க நிர்வாகி பிரேமா, சிஐடியு நிர்வாகிகள் லிங்கநாதன், விஜயகுமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் கோதண்டம், எம்எஸ்.ராஜா, உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன் பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: