நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான 3 அடுக்கு வணிக வளாகத்தின் மாடியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (அக். 13)  மதியம் 12 மணியளவில் திடீரென செல்போன் கோபுரம் தீப்படித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிறுவன ஊழியர்கள் இதுகுறித்து தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கோபுரம் அருகே இருந்த சர்வர் அறைக்கும் பரவியது. இதனிடையே தீ வேகமாக எரிவதைக் கண்ட ஊழியர்கள் நிறுவனங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர். சம்பவ இடத்திற்கு எழும்பூர், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் சர்வர் அறையில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்தில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave A Reply