சீமைக்கருவேல மரங்கள் தொடர்பான வழக்கு நவ. 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடுமாறு உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் மேகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சீமைக் கருவேல மரங்களை அகற்றத் தடைவிதித்து உத்தரவிட்டது. சீமைக் கருவேல மரங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அந்த குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதன்படி இடைக்கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு வெள்ளியன்று (அக். 13) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், நீதிபதி சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நிபுணர் குழு அறிக்கையை எதிர்மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டு வழக்கை நவ.22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave A Reply