நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவுநீர் கெடிலம் ஆற்றில் கலந்து கம்மியம்பேட்டை தடுப்பணையில் தேங்குவதை தடுக்க வேண்டும். கம்மியம்பேட்டை குப்பை மேட்டை அகற்ற வேண்டும். டெங்கு பாதிப்பை உண்டாக்கும் கடலூர் ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளிலுள்ள சுமார் 100 சிறிய குப்பைமேடுகளை அப்புறப்பட்ட வேண்டும். கம்மியம்பேட்டை தடுப்பணையில் மக்கள், விலங்குகள், தாவரங்களுக்கு உயிர்கொல்லியாக விளங்கும் சுமார் 8 ஆண்டுகளாக தேங்கியுள்ள ஆயிரக்கணக்கான டன் நச்சுக்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப் பினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் கண்ணன், நடராஜன், ரவிச்சந்திரன், மாய வேல், கோமதிநாயகம், கிருஷ்ணமூர்த்தி, மனோகரன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலர் மு.மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இணைப்பொதுச்செயலர் பி.புருஷோத்தமன் வரவேற்க, பொருளர் சுகுமாறன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: