கோவை, அக். 13-
வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு கோவை நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சரவணன். இவர் இங்கு பணியாற்றி வந்த காலத்தில் பல்வேறு வழக்குகளில் விசாரணை அதிகாரியாக இருந்துள்ளார். இதன்பின் பணி மாறுதல் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்று விட்டார். அதேநேரம், துடியலூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது போடப்பட்ட பல்வேறு வழக்குகள் கோவை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் சரவணன் விசாரணை அதிகாரியாக உள்ள வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் வழக்குகள் தொடர்ந்து வாய்தாக்களாக நீடித்து சென்று கொண்டிருந்தது. இதன்காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணகிரியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சரவணன் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டம் என கோவை நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: