திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என சிபிஎம் ஆரணி வட்டார மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிபிஎம் ஆரணி வட்டார 8 வது மாநாட்டிற்கு பி.சாம்பசிவம் தலைமை தாங்கினார். ஜி.ராமமூர்த்தி கொடியேற்றினார். கே.பாண்டியராசா வரவேற்றார். சிவப்பிரகாசம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.

மாநிலக்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கண்ணன், இரா.பாரி ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டில் சி.அப்பாசாமி வட்டார செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், 9 பேர் கொண்ட வட்டார குழு அமைக்கப்பட்டது.

ஆரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், காய்,கனி மார்க்கெட் செயல்பட தனி இடம் ஒதுக்கி தர வேண்டும், ஆரணி மயானத்தில் எரிதகன மேடையை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சனை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார குழு உறுப்பினர் நரசிம்மன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: