கள்ளக்குறிச்சி இந்திலியில் உள்ள டாக்டர்.ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் முனைவர் கு.மோகனசுந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரித் தலைவர் டாக்டர் க.மகுடமுடி  தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர்.ஜி.எஸ்.குமார் முன்னிலை வகித்தார். டெங்கு பற்றிய விழிப்புணர்வு பற்றி கள்ளக்குறிச்சி வட்டார அரசு மருத்துவ அலுவலர்கள் பங்கஜம், கச்சிராயப்பாளையம் சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டு ஏ.டி.எஸ். கொசுவைப் பற்றியும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளைப் பற்றியும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றியும் எடுத்துரைத்தனர். மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் துணைமுதல்வர் பெ.ஜான்விக்டர் நன்றி தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: