ஹனோய்:
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணிகளின்போது மேலும் சிலரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: