நாமக்கல், அக்.12-
வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக சாதிய ஆதிக்க சக்தியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தலித் அமைப்பினர் முறையீட்டனர். இதுதொடர்பாக, தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ப,ராமசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தீனதயாளன், ஆதித்தமிழர் கட்சியின் பழ.பிரேம்குமார், ஆதித்தமிழர் பேரவைமாவட்ட செயலாளர் பி,மணிமாறன், அருந்ததியர் மக்கள் இயக்க மாநில துணை செயலாளர் பி.ஆர்.ரஜனி ஆகியோர் புதனன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தலித்கள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தாக்குதல்களுக்கு முதலில் குடியுரிமைபாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.

அச்சட்டம் எதிர்பார்த்த அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதால் அதனை திருத்தி வன்கொடுமை தடுப்புத் திருத்தச்சட்டம் 2015ல் உருவாக்கப்பட்டது. அதுவும் கறராக அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி கடந்த ஆக்.10ம் தேதி (செவ்வாய்கிழமை) நாமக்கல்லில் ஒரு சில சாதிய ஆதிக்க சக்திகளைச் சேர்ந்த அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறான இயக்கங்கள் அனுமதியளிப்பதை ஏற்புடையதல்ல, குறிப்பாக, கடந்த காலத்தில் மதுரைவீரன், வரலாறு மீட்பு மாநாடுபோன்ற தலித் அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வுகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை, இம்மாநாடுகளால் மற்ற சமுக மக்களின் மனதுபுண்படுத்தும் என காரணம் சொல்லப்பட்டது, இச்சூழலில், அரசு இயற்றிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் சாதிய ஆதிக்க சக்தியினரின் ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதியளித்தது ஏற்புடையதல்ல. ஆகவே, எதிர்காலத்தில் இவ்வாறான போராட்டங்களுக்கும், அமைப்புகளுக்கு அனுமதியளிக்காமல் இருப்பதை மாவட்ட ஆட்சியர் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறுப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: