ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில், ஆறாவதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோர் உயிருடன் கற்களை வைத்து மூடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தால்வார் அருகேயுள்ள தோபாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் வீரம் லால் (வயது 40) இவரின் மனைவி சேரம்பாய். இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே ஐந்து மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சோரம்பாய் மீண்டும் கர்ப்பமானார். அக்டோபர் 5-ம் தேதி, அரசு மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
அக்டோபர் 11-ம் தேதி, பச்சிளம் குழந்தையை தலாரபாத்தன் என்ற இடத்தில் உள்ள உணவுக் கிடங்கு அருகே, உயிருடன் கற்களை வைத்து மூடிவிட்டு பெற்றோர் சென்றுவிட்டனர். குழந்தை அழும் சத்தம் கேட்டு, அந்த வழியாக வந்த சிறுவன் கற்களை அகற்றியுள்ளான். தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
இதையடுத்து, தால்வார் மாவட்ட கூடுதல் எஸ்.பி குஷால்சிங், குழந்தையின் பெற்றோரைக் கைதுசெய்தார். போலீஸ் விசாரணையில் ஆறாவதாகவும் ஆண் குழந்தை வேண்டுமென்று ஆசைப்பட்டதாகவும், எதிர்பார்ப்புக்கு மாறாக பெண் குழந்தை பிறந்ததால் இவ்வாறு செய்ததாகவும் வீரம்லால், சோரம்பாய் கூறியுள்ளனர். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று நடந்த இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply