மன்னார்குடி நகரத்தைச் சேர்ந்த ரெகுராமன் மகள் மதுமதி (20). இவர் தஞ்சை தனி பயிற்சி நிறுவனத்தில் பட்டய கணக்காளர் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஞாயிறன்று காய்ச்சலுக்காக மன்னார்குடி மாவட்டஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார். காய்ச்சல் கடுமையாகவே புதனன்று (11.10.2017) தனியார் ஆய்வகத்தில் ரத்தபரிசோதனை செய்திருக்கின்றனர். அதன் முடிவில்  டெங்கு காய்ச்சல் என உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.உடனே மாலை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இரவு மதுமதியின் நிலை மோசமாகியிருக்கிறது. உடனே தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையில் மதுமதியை அவரது பெற்றோர்கள் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றன்ர. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று ( வியாழனன்று ) விடியற்காலை உயிரிழந்துள்ளார். இந்நிலையில்  இறந்த மதுமதிக்கு மன்னார்குடி நகரத்தின் அனைத்து அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply