ஈரோடு, அக்.12-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிராபகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மண்டலம் மற்றும் திருப்பூர் மண்டலம் சார்பில் வருகின்ற ஆக்.13 தேதி முதல் 17 தேதி இரவு வரை ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ஊர்களிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, பழனி,சேலம், நாமக்கல், கரூர், சத்தி மற்றும் ராசிபுரம் ஆகிய ஊர்களுக்கு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் (மேற்கு), அடையாறு (காந்திநகர்), தாம்பரம் (சானிடோரியம்) மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு மார்க்கம் செல்லும் பயணிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., ஈரோடு மண்டலம் சார்பில் தினந்தோறும் 748 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 100 பேருந்துகள் சிறப்பு இயக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி பேருந்துகளை சிறப்பாக இயக்குவதற்கு ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு இயக்க பணியாளர்கள் பணியமத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply