மன்னார்குடி
கோரிக்கைகள் தொடர்பாக  மாவட்ட ஆட்சியரை சந்தித்து விளக்கமளித்து மனுவினை அளிக்க வந்த ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க (சிஐடியு) நிர்வாகிகளை அலட்சியமாக நடத்திய திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கிற்கு கண்டம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. முனியாண்டி   வெளியிட்டுள்ள அறிக்கைளில் கூறியிருப்பதாவது : சங்கத்தின் மாவட்டக்குழு வன்மையாக கண்டித்துள்ளது. இதுபற்றி சங்கத்தின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  ஊராட்சி மேல் நிலை தொட்டி இயக்குநர்கள் மற்றும் துப்புறவு தொழிலாளர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்த உள்ளாட்சி சங்க நிர்வாகிகளை சந்திக்க அனுமதித்து கோரிக்கை மனு வாங்க மறுத்த திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அலட்சிய நடவடிக்கைக்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் (சிஐடியு) கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் அதன் பாதிப்பு கடுமையாக உள்ளது.

இந்நிலையில் ஊராட்சிகளில் மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்து தூய்மையான குடிநீர் வழங்குவதும் அத்துடன் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கும் பொறுப்பும் கொண்ட மேல்நிலைத் தொட்டி இயக்குநர்கள் மற்றும் துப்புற ஊழியர்களின் உடனடி கோரிக்கைகளின் அவசர அவசியம் கருதி 10.10.2017 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கொண்டே ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்களின் சங்க நிர்வாகிகளை சந்திக்க மறுத்ததோடு கோரிக்கைகளை ஊராட்சி உதவி இயக்குநரிடம் கொடுத்துவிடுமாறு கூறியுள்ளார். இந்த தகவலை மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் தெரிவித்தார். கோரிக்கைகள் தொடர்பாக நேரில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விளக்கமளித்து மனுவினை அளிக்க வந்த உள்ளாட்சி சங்க நிர்வாகிகளை காக்க வைத்து அலட்சியம் செய்த மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கை வன்மையாக கண்டனம் செய்வதோடு கிராம ஊராட்சி மேல் நிலை தொட்டி இயக்குநர்கள் மற்றும் துப்புறவு தொழிலாளர் ஊராட்சி தூய்மை காவலர்கள் பணியிட பொறுப்பாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 23.10.2017 காலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்திருப்பதாக கூறியிருக்கிறார். 

Leave A Reply