தில்லி: டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என வியாழனன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல குறைபாடு காரணமாக கடந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதியன்று உயிரிழந்தார். இதன் பின்னர்  ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற தொகுதிக்கு  தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது பிரிந்திருந்த அதிமுக சார்பில் இரு வேட்பாளர்களும், திமுக சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறவேண்டுமென்று அதிமுக சார்பில் ஓட்டிற்கு ரூ 5 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த பண விநியோகத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்கிடையில் வருமான வரிதுறையினர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய சோதனையில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் பிடிபட்டது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்தது. இதற்கிடையில் தற்போது மீண்டும் டிசம்பர் 31ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது-

Leave A Reply

%d bloggers like this: