மதுரை,
டெங்குவை ஒழிக்க சாணி தெளியுங்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர், கமிஷனர், கட்சி நிர்வாகிகளுடன் சோலை அழகுபுரம், எம்.கே.புரம் பகுதிகளுக்க்ச் சென்றார். வீடு வீடாகச் சென்று, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், டிரம், தொட்டிகளில் தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள் என்றார். “பைப்புல தண்ணீர் வருவதே இல்லை அப்புறம் எப்படி தேக்கி வைக்கிறது” என்று சொன்னவர்களை கண்டு கொள்ள வில்லை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ‘‘டெங்கு கொசு வருவதற்குக் காரணம், அந்தக் காலம்போல பெண்கள் வீட்டில் சாணித் தெளிச்சு, மெழுகிக் கோலம் போடுவதில்லை, அந்தப் பழக்கம் மறைந்துவிட்டது. அதனால்தான் கொசு அதிகமாக உற்பத்தியாகிறது. அந்தக் காலத்தில் கொசுவரவில்லை’’ என்றார்
ஏற்கனவே அமைச்கசர் செல்லூர் ராஜூ கடந்த  ஏப்ரல் மாதம் வைகை அணையில் நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாக்கோலால் அணையை மூடும் முயற்சியில் தோல்வியடைந்தார். இதனால் அவர் மக்களிடையே கடும் விமர்சனங்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: