சேலம், அக். 12-
சேலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம் கந்தம்பட்டி பைபாஸ் ராஜீவ்நகர், வண்டிக்கார நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை, சாக்கடை மற்றும் குடிநீர் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று ராஜீவ் நகர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும், சாலை வசதி இன்றி சேறும், சகதியுமாக இருந்த சாலையில் பயிர்களை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், குறிப்பிட்ட பகுதிகளில் சாலைபோட மாநகராட்சி நிர்வாகம் தற்போது அனுமதியளித்துள்ளது. இன்னும் முப்பது நாட்களுக்குள் சாலை வசதி செய்து தரப்படும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. முன்னதாக, இப்போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாநகர மேற்கு செயலாளர் எம்.கனகராஜ், வாலிபர் சங்க மேற்கு செயலாளர் கணேசன், தலைவர் பிரகாஷ், ராஜீவ் நகர் கிளை செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply