கோவை, அக்.12-
கோவையில் காவல்துறையினரிடம் தகராறு செய்ததாக இந்து மக்கள் கட்சியினர் மூவர் வியாழனன்று கைது செய்யப்பட்டனர். கோவை பீளமேடு பகுதியில் சாலையின் நடுவே பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையுறாக இந்து மக்கள் கட்சியினர் கொடிக் கம்பத்தினை நட்டு வைத்திருந்தனர். இதனையடுத்து கோவை மாநகராட்சியின் அறிவுறுத்தலின் பேரில் பீளமேடு காவல்துறையினர் வியாழனன்று அதனை அகற்ற முற்பட்டனர்.

அப்போது, அங்கு வந்த இந்து மக்கள் கட்சியினர் கொடி கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துடன், காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் முன்னிலையில் அரசு ஊழியர் என்றும் பாராமல் பணியை செய்யவிடாமல் தடுத்ததாக காவல்துறையினரின் புகாரின் பேரில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த சந்தோஷ், லோகேஷ், சதீஷ் ஆகிய மூவர் கைதுசெய்யப்பட்டனர். இதன்பின் மூவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply