பாக்தாத்,
ஈராக்கில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 11 பேர் பலியாகினர். மேலும்  15 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள ஹிட் நகரத்தில் இருக்கும் கபே ஒன்றில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 11 பேர் பலியாகினர். மேலும்  15 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினரும் மருத்துவக்குழுவினரும் விரைந்தனர். அன்பர் மாகாணத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலை ஐ.எஸ் பயங்கரவாதிகள் நிகழ்த்தியிருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: