சேலம், அக்.12-
சேலம் மாவட்டத்தில் அனைத்து உணவகங்களிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும் என சேலம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்து தொடர்பான ஆலோசனை கூட்டம் சேலம் ஒட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சேலம் லட்சுமி பிரகாஷ் ஓட்டலில் நடைபெற்றது. இக்கூட்டததில் செல்வி மெஸ் நிறுவனர் பி.எல்.பழனிசாமி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சித்த மருத்துவர் சத்திய நாராயணன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஒட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் உணவு வணிக தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் முறையை பற்றி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்பின் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்களிலும் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கிட வேண்டும் என சேலம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன் உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: