சென்னை, அக்.12-
அந்தியூர் வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் தனியார் மீன்பிடிக்கும் ஏல குத்தகையை ரத்து செய்து கூட்டுறவு சங்கமே ஏற்று நடத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி கூட்டமைப்பு மற்றும் அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவுசங்கம் (சிஐடியு) சார்பில் சென்னை தேனாம்பேட்டை மீன்வளத்துறை இயக்குநரிடம் புதனன்று (அக்11) மனு அளிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தவரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் கடந்த 25 ஆண்டுகாலமாக அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு சங்கம் மீன்பிடித்து விற்பனை செய்துவந்தது. இதனால் 300மீனவக்குடும்பத்தினர் பயனடைந்து வந்தனர். பிடிபடும் மீன்களில் அரசுக்கு எவ்வித இழப்பும் இன்றி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அனுமதியோடு பாதியை கூட்டுறவு சங்கமும் மீதியை மீனவர்களும் பங்கிட்டு கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 21.01.17 அன்றுதிடீரென மீன்பிடிக்க தடை அறிவிக்கப்பட்டது. வரட்டுப்பள்ளம் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் குத்தகை உரிமையை ஏலம் விடப்பட்டு கே.முருகேசன் என்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் நியாயம் கேட்டபோது பேசிதீர்த்துக்கொள்ளுங்கள் என கூறியதாகவும் அதனடிப்படையில் கேட்டபோது அவர் கே.கனகராஜ் என்பவருக்கு கைமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

தொழிலதிபர் ஆர்.கனகராஜிடம் மீன்பிடிக்கும் குத்தகை எடுத்த தொகை கொடுப்பதாகவும் 300 மீனவகுடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மீன்பிடி உரிமை கோரியபோது அவர்மறுத்துதோடு தரக்குறைவாக பேசியுள்ளார். ஆளுங்கட்சியின் பின்புலத்தோடு மனிதாபிமானமின்றி தனியார் காண்ட்ராக்டருக்கு தாரைவார்க்கப்பட்ட மீன்பிடி உரிமையை மீண்டும் வழங்க கோரியும் 25.9.12ம் தேதியிட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையிலான தமிழக அரசின் அரசாணை எண் 165ஐ உடனடியாக ரத்து செய்யக்கோரி மீன்வளத்துறை இயக்குநரிடம் இந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முன்னதாக சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரட்டுப்பள்ளம் நீர் தேக்கத்தில் தனியார் ஏலக்குத்தகையை ரத்து செய்து அரசால் ஆண்டுஇலக்குத்தொகை செலுத்தியதைப்போல மீனவர் கூட்டுறவு சங்கம் ஏற்று நடத்தி கொள்ள அனுமதி வழங்கவேண்டும்.

இந்த நடைமுறையை அனைத்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்தேக்கங்களிலும் மீனவர் நலன் கருதி அமல்படுத்த வேண்டும்.இதுகுறித்து ஈரோடு அந்தியூரிலிருந்து சென்னை மீன்வளத்துறை இயக்குரை சந்தித்து முறையிட இரண்டு பேரூந்துகளில் வந்த மீனவர்களையும் சங்க நிர்வாகிகளையும் சென்னை வளசரவாக்கத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். கோரிக்கை மனு கொடுக்கவிடாமல் தடுத்து பலமணிநேரம் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இதுகாவல் துறையின் காட்டுமிராண்டித்தனத்தை காட்டுவதாக உள்ளது. சிஐடியு மாநிலக்குழு இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது என்றார். இந்த சந்திப்பு இயக்கத்திற்கு அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் முன்னாள் தலைவர் ஏ.கே.பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், பொ
ருளாளர் வீர அருண், வட
சென்னை மாவட்டசெயலாளர் ஆர்.லோகநாதன், தென்
சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயசங்கரன், எம்.குமார்
சிஐடியு ஈரோடு மாவட்ட
துணைச்செயலாளர் ஆர்.முரு
கேசன், தமிழ்நாடு தீண்டாமை
ஒழிப்பு முன்னணி ஈரோடு
மாவட்ட செயலாளர் பி.பி.பழனிச்
சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: