புதுத்தில்லி,
18 வயதுகுட்பட்ட மணமான சிறுமிகளிடம் கணவர் பாலியல் உறவு வைத்தால், அது பலாத்காரமாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் ஆங்காங்கே குழந்தைகள் திருமணங்கள் நடந்து கொண்டு தான் வருகின்றன. தகவல் கிடைத்து உரிய நேரத்தில் திருமணங்கள் தடுக்கப்படும் சிறுமிகள் போலீசாரால் மீட்கப்படுகின்றனர்.

இதற்கிடையே, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. திருமணமான சிறுமிகள் குழந்தைகளை சுமந்து வேதனைப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. வழக்கின் தீர்ப்பில் 15 – 18 வயதுடைய சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டாலும் அது வன்எகாடுமையாக கருதப்படும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் சட்டத்தில் கூறப்பட்ட வயதிற்கு முன் மணமுடிக்கும் சிறுமிகள், ஓராண்டிற்குள் கணவர் பாலியல் உறவு வைப்பது தொடர்பாக புகார் அளித்தால் அதனை பாலியல் வன்கொடுமையாக கருதி வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Leave A Reply