காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் அருகே 600 ஆண்டு பழைமையான ரூ.2.5 கோடி மதிப்பிலான சிலையை கடத்தி விற்க முயன்ற 4 பேரை காவலர்கள் கைது செய்தனர்.

சென்னை – காஞ்சிபுரத்திற்கு இடையே பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள ஆரிய பெரும்பாக்கத்தில் சிலை கடத்தல் நடைபெறுவதாக  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில்  நின்று கொண்டிருந்த வாகனத்தில் சோதனையிட்டனர்.

அப்போது வாகனத்தில் 600 ஆண்டு பழைமையான ரூ.2.5 கோடி மதிப்பிலான சுந்தரமூர்த்தி நாயனார் சிலை மறைத்து வைக்கபப்ட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிலையை கைப்பற்றிய காவலர்கள் சிலையை கடத்தி விற்க முயன்ற சேகர், கார்த்திக், மகேந்திரன், தட்சிணாமூர்த்தி ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் உத்திரமேரூர் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோயிலில் இருந்து இந்த சிலையை அவர்கள் கடத்தியிருப்பதும்,   மலேசியாவை சேர்ந்த ஒரு தரகர் மூலம், அமெரிக்காவிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிற்கு விற்க முயன்றதும் தெரிய வந்தது. இது தொடர்பாக கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையிலான காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply