மும்பை,

மகாராஷ்டிராவில் பிற மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நலநிர்மான் சேனா கட்சியினர் 7 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் குப்வாத்தில் மகாராஷ்டிரா தொழிலக மேம்பாட்டு அமைப்பு உள்ளது.  இந்த தொழிற்சாலையில் உள்ளூர் வாலிபர்களுக்கு வேலை வழங்க கோரி ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்) கட்சி ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் செவ்வாயன்று மகாராஷ்டிரா தொழிலக மேம்பாட்டு அமைப்பில் பணி புரியும் பிற மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீது நலநிர்மான் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவலர்கள் நலநிர்மாண் சேனா கட்சியினர் 7 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply