திருப்பூர், அக்.11-
அவிநாசி வட்டாரத்தில் பனியன், விசைத்தறி, ஒர்க்ஷாப், மளிகை, ஜவுளி, உணவகம், பேக்கரி, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காலம் கடத்தாமல் போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பாக புதனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு அவிநாசி பகுதி பனியன் சங்கச் செயலாளர் ஏ.சண்முகம் தலைமை வகித்தார். இதில் சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சம்மேளனப் பொதுச் செயலாளர் எம்.சந்திரன், சிஐடியு பனியன் சங்கப் பொருளாளர் அ.ஈசுவரமூர்த்தி, சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.கனகராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் ஆர்.வேலுச்சாமி, ஜி.சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply