மும்பை,

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியின் தலைவராக நடிகர் அனுபம் கேர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியின் தலைவராக நடிகர் கஜேந்திர சவுகான் கடந்த 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரி மாணவர்கள் பல மாதங்களாக வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில்  இக்கல்லூரியின் தலைவராக நடிகர் அனுபம் கேர் புதனன்று  நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அனுபம் கேரின் மனைவியும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கிரண் கேர் கூறுகையில், அனுபம் கேர் ஒரு நல்ல தலைவராக செயல்படுவார். அதற்கான தகுதியும் திறமையும் அவருக்கு உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன். இதற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரணி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Leave A Reply