தில்லி,

தில்லியில் பட்டாசு விற்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி வணிகர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசை கட்டுப்படுத்த தில்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் (என்சிஆர்) பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரிய வழக்கில் தில்லியில் பட்டாசு விற்பனை செய்ய நிரந்திர தடை விதித்து உச்ச நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பளித்தது.

இதை தொடர்ந்து தில்லியில் உள்ள பட்டாசு வணிகர்கள், பட்டாசு விற்பனை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்துள்ளனர். பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், தங்களிடம் தேங்கி உள்ள சரக்குகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்கும்படியும் அந்த மனுவில் கேட்கப்பட்டுள்ளது.

Leave A Reply