ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் இருவர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா பகுதியில் உள்ள ஹஜின் எல்லைப் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை அப்பகுதியை  பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதில், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும்,  இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Leave A Reply