டேராடூன்;
உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை அருகில், கடந்த ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தியது. அப்போது, கலவரத் தடுப்பு சிறப்புப் படையை சேர்ந்த போலீஸ் குதிரையான சக்திமானின் கால்களை, பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி, தடியால் கொடூரமாகத் தாக்கினார்.இதில் கால்கள் உடைந்த சக்திமான் குதிரை, சிகிச்சை பலனின்றி இறந்தது. இதுதொடர்பாக ஜோஷி மீது வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, கணேஷ் ஜோஷி மீதான வழக்கு தற்போது திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இது விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply