காஞ்சிபுரம்:
இந்தியாவில் உள்ள கலாச்சாரம் மற்றும் சுற்றுலா தலங்களை காண ரஷிய நாட்டை சேர்ந்த எவிக்மிக் இவாஞ்சலின் வந்துள்ளார்.தமிழ்நாட்டை எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் புகழ்பெற்ற காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சென்று சுற்றிப்பார்த்துள்ளார். பின்னர் கையில் மேற்கொண்டு பணம் இல்லாததால் ஏடிஎம் சென்று பணம் எடுக்க முயன்றார்.

ஆனால் எதிர்பாராவிதமாக ஏடிஎம் கார்டு முடக்கப்பட்டுள்ளது அவரால் பணம் எடுக்க முடியவில்லை.இதற்கு மேல் நம்மால் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க முடியாது என எண்ணிய எவிக்மிக் வேறு வழியில்லாமல் சென்னை சென்றால் போதுமென  குமரக்கோட்டம் முருகன் கோவில் வாசலில் தொப்பியை வைத்து “நான் இந்தியாவை சுற்றிப்பார்க்க வேண்டும். என்னிடம் பணம் இல்லை. பண உதவி செய்யுங்கள்” என சைகை மூலம் பிச்சை எடுத்துக்கொண்டு கொண்டிருந்தார்.தகவலறிந்த சிவகாஞ்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை போலீஸார் சரிபார்த்தனர். அவரிடம் அதுதொடர்பான முறையான ஆவணங்கள் இருந்தது. தொடர்ந்து அவரை சென்னைக்கு ரெயிலில் ஏற்றி விட்டு அங்குள்ள தூதரக அதிகாரிகளை சந்திக்கும்படி அறிவுறுத்தி போலீஸார் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பிவைத்தனர். அனுப்பினர்.

ரஷ்யா இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. ரஷிய நாட்டை சேர்ந்த எவிக்மிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சென்னையில் உள்ள அதிகாரிகள் செய்வார்கள் என உறுதியளித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply