பெங்களூரு;
தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரம்யா காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர்  சமூக ஊடக தலைவராக அரியானா முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஹூடாவின் மகன் தீபந்தர் சிங் ஹூடா இருந்தார்.

எதிர் வரும் காலங்களில் குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி இந்த அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

“குத்து ரம்யா” என தமிழகத்தில் அழைக்கப்படும் ரம்யா பிறந்தது கர்நாடகம் மாநிலமாக இருந்தாலும் பள்ளிப்படிப்பை படித்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான்.கர்நாடக அரசியலில் அதிரடிக்கு பெயர் பெற்ற ரம்யாவின் இயற்பெயர் திவ்யா ஸ்பந்தனா என மாண்டியா மக்களால் அழைக்கப்படுகிறார்.

Leave A Reply