வாஷிங்டன்,

கலிபோர்னியா மாகாணத்தில் எரிந்து வரும் காட்டுத் தீயில் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இப்பகுதிகளில் நிலவும் வறட்சியால் அங்குள்ள வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக  காட்டுத் தீ தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகின்றது. சாண்டா ரோசாவின் நகரத்திற்குள்ளும் தற்போது இந்தக் காட்டுத் தீ பரவி உள்ளது. இதனால் இரண்டே நாட்களில் நகரத்தில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் அழிந்து போய் உள்ளது. தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தீயினால் 2000 கட்டிடங்கள் மற்றும் வீடுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. இந்த தீ விபத்தால் இது வரை 175,000 பேர் கலிபோர்னியாவை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்த 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் 14 இடங்களில் 70 ஆயிரம் ஏக்கர் எரிந்து சாம்பலானது.

Leave A Reply