புதுதில்லி;
அமித் ஷா மகனுடைய நிறுவனம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு லாபம் ஈட்டியதிலும்; அவரது நிறுவனத்திற்கு பிணை எதுவும் இல்லாமல் கூட்டுறவு வங்கி ரூ. 25 கோடி கடன் வழங்கியதிலும் மிகப்பெரும் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இந்த ஊழல் குறித்து விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா-வும் மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார்.அமித்ஷா-வின் மகன் ஜெய் ஷாவின் முறைகேடு அம்பலமாகிருக்கும் நிலையில் ஊழலைப் பற்றி பேசும் அருகதையை பாஜக இழந்து விட்டது என்று கூறியுள்ள யஷ்வந்த் சின்ஹா, அமித்ஷா மகன் நிறுவனத்தின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அரசுத் துறைகள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“அமித் ஷா மகன் ஜெய் ஷா-வுக்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி இருப்பது, முன்னெப்போதும் நடக்காதது; ஒரு தனி நபருக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராவது இதற்கு முன்னர் நடக்காத ஒரு நிகழ்வு; அமித்ஷா மகனுக்கு மின்துறை அமைச்சகம் கடன் கொடுத்திருக்கிறது; இந்நிலையில் ஜெய் ஷா-வுக்கு ஆதரவாக அமைச்சர் பியூஷ் கோயல் பேசியிருப்பது ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது” யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: