சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் அழகுசாதன நிறுவனமான டவ் இனவெறியை தூண்டும் விதத்தில் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டதற்கு மன்னிப்பு கோரி உள்ளது.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல நிறுவனம் யுனிலீவர் . இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒன்றான டவ் (Dove) சோப்பிற்கு சமீபத்தில் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அந்த விளம்பரத்தில் கருப்பின பெண் ஒருவர் தனது மேலாடையை நீக்குவது போலவும் ஆடையை நீக்கியவுடன் வெள்ளை நிறத்தில் இளம் பெண் தோன்றுவது போலவும் அந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் கருப்பின பெண்களை இழிவுபடுத்துவதாகவும் இனவெறியை தூண்டும் விதத்தில் இருப்பதாக கடும் விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனங்களை தொடர்ந்து யுனீலீவர் நிறுவனம் சமூக வலைத்தளங்களில் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய விளம்பரம் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave A Reply